கடமலைக்குண்டு, ஜூன் 15- தேனி மாவட்டம், வருசநாடு அருகே காமராஜ புரத்தை சேர்ந்தவர் சரவணன். செவ்வாய்க்கிழமை சரவணன் அவரது தாயுடன் வருசநாட்டிலிருந்து காம ராஜபுரம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இடையே காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தமி ழன் மற்றும் அவரது நண்பர்கள் சரவணன் மற்றும் அவரது தாயை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற சரவணன் செவ்வாய்க்கிழமை மாலை நண்பர்களை அழைத்துக்கொண்டு மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு பைக்கில் வந்து கொண்டிருந்த தமிழனை வழிமறித்து தாக்கி திட்டினர். இதனை அறிந்த தமிழனின் உறவினர்கள் அங்கு வந்து சரவணன் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பி னரும் கொடுத்த புகார் மீது 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.