தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை ஒட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.