districts

img

பொங்கல் தொகுப்புகள் வழங்கல்

திருவாரூர், ஜன.9-  திருவாரூர் மாவட்டம் திருவா ரூர் நகராட்சிக்குட்பட்ட, திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். நாகை நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ர மணியன் முன்னிலை வகித்தனர்.
திருச்சி
திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நாச்சியார் பாளையம் நியாய விலைக் கடையில் மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். பேராவூரணி பேராவூரணியில் சேதுசாலை நியாய விலைக்கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேராவூரணி தெற்கு ஒன்  றிய திமுக செயலாளர் க.அன்பழ கன் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அர்பன் கடை  எண் 17-ல், மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்  டாட்சியர் முருகேசன், மாவட்ட வழங்  கல் அலுவலர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை ரயில் நிலை யம் அருகில் உள்ள காவேரி நகர் - 1 நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாவட்ட ஆட்சி யர் இரா.லலிதா வழங்கினார். தரங்கம்பாடி வட்டம், திருவிளை யாட்டம் ரேசன் கடையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலர் நாகராஜன் தலைமையில் வழங்கப்பட்டன.