திருவாரூர், ஜன.9 - திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழையால், நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. அரசு உரிய முறையில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்க ளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 3.5 லட்சம் ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள் ளது. இதில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழையால், சம்பா பயிர்களுக்கு பெரும் பாதிப்பு இல்லை. ஆனால் 1.25 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தாளடி பயிர்கள், கடந்த சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த தொடர் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
75 ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிப்பு
குறிப்பாக, குடவாசல் தண்டலை கிராமம் மற்றும் கண்டிரமாணிக்கம், சீதக்கமங்கலம், மேலராமன் சேத்தி, விக்கரப்பாண்டி ஊராட்சி புளியஞ் சேரி, குடவாசல் வடக்கு ஒன்றியம் ஆலத்தூர், செருகுடி, திருவிழி மிழலை ஊராட்சி முதல்கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் மணக்கால், செம்மங்குடி, பெருந்த ரங்குடி, காவனூர் உள்ளிட்ட இடங்க ளிலும், திருத்துறைப்பூண்டியில் கொருக்கை, பாமணி, இராயநல்லூர் ஆகிய ஊராட்சி மற்றும் விளக்குடி சேகல் உள்ளிட்ட ஊராட்சிகளில், கதிர் விடும் தருவாயில் இருந்த பால் கதிர்கள் மற்றும் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் நீரில் மூழ்கி பலத்த சேதமடைந்துள்ளன. இதே போல் திருத்துறைப்பூண்டி வடக்கு பகுதி கோமல், ஆதனூர், ஆண்டங் கரை மற்றும் அம்மனூர், பூசலங்குடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ஏக்கர் வரையிலான தாளடி பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகளின் துயரத்தை போக்கும் வகையில், உடனடியாக தமிழ்நாடு அரசு வேளாண் அதிகாரிகளை கொண்டு களஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
வீடு இடிந்து சிறுமி பலி
மேலும் நன்னிலம் ஒன்றியம், அதம்பாவூர் ஒத்த வீடு கிராமத்தில் வசிக்கும் மின்வாரிய ஒப்பந்த தொழி லாளர் ராஜசேகரின் வீட்டின் சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள் மோனிஷா (9) மரணம் அடைந்துள்ளார். இவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி சேகல் ஊராட்சியில், கோட்டத்தில் உள்ள காலனி வீடுகளின் மேற்கூரைகள் மிகுந்த சேதமடைந்தும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் விழுகின்றன. மேலும் சுவர்கள் பலவீனமடைந்து காலனி வீடுகள் இடிந்து விழும் நிலை யில் உள்ளன. எனவே, மாவட்டத்தில் உள்ள காலனி வீடுகளை ஆய்வு செய்து பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்ட தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.