திருவள்ளூர், அக்16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (அக் 16) பழ வேற்காடு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மீஞ்சூர் பகுதி தலை வர் வி.வினாயகமூர்த்தி தலைமையில் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் எஸ்.அனுரத்னா முகாமை துவக்கி வைத்து பேசினார்.இதில் வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன், மாவட்ட செயலாளர் டி.மதன், பொருளாளர் ப.லோகநாதன், மீஞ்சூர் பகுதி செயலாளர் எம்.சிவா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.டிக்சன், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், லைட் ஹவுஸ் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராணிதேசப்பன், மீன்பிடி தொழி லாளிர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.நித்தியானந்தம், பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எத்திராஜ் ஆகியோர் பேசினர். இதில் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையிலிருந்து வந்த மருத்துவ குழுவினர் ரத்தத்தை சேகரித்து சென்றனர்.