திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனிடம் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதிக்காக ரூ.3. லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்பிராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், இ.மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.