திருவண்ணாமலை, செப். 4- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஞாயிறன்று (செப்.4) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாரிமுத்து, எஸ். ராமதாஸ், லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். வழக்கறிஞர் ரஜினிகாந்த் வர வேற்றார், ரவி தாசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொருளாளர் இ.மோகனா துவக்க உரையாற்றினார், மாவட்ட செய லாளர் பா. செல்வன் வேலை அறிக்கை வாசித்தார். செங்கம் சட்டமன்ற உறுப்பி னர் மு.பெ.கிரி, சிபிஎம் மாவட்ட செய லாளர் எம். சிவக்குமார், சகோதர அமைப்பு களின் தலைவர்கள் ம.பா. வர்கீஸ், என்.எ.கிச்சா, கோ. முருகன், பன்னீர் செல்வம், மரியநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாதர் சங்கம் மாநில குழு உறுப்பினர் எஸ். டி. சங்கரி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் இரா.பாரி, எம்.பிரகலநாதன், வாசுகி, லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பஞ்சமி நிலங்களை மீட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதி ஆணவ படு கொலையை தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் தலைவராக எஸ். ராமதாஸ், செயலாளராக பா. செல்வன், பொருளாளராக எஸ். சிவக்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சிஐடியு மூத்த நிர்வாகி எம். வீரபத்திரன் ஆகியோர் பேசினர். முன்னதாக அண்ணா பூங்கா அருகில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்தில் வைகறை இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிறைவாக ஆர். சிவாஜி நன்றி கூறினார்.