districts

டிச.14 முதல் திருப்பூரில் காத்திருப்புப் போராட்டம் விவசாயிகள் போராட்டக்குழு

திருப்பூர், டிச.11- தில்லியில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவாக டிசம்பர் 14 ஆம் தேதி முதல் திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவ சாயிகளைத் திரட்டி காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந் துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரி யும், மின்சார திருத்த மசோதாவை கைவிடக் கோரியும், தில்லியில் கடந்த 15 நாட்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நாடு தழுவிய அளவில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப் புப் போராட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது.

அப்போராட்டத்தை திருப் பூர் மாவட்டத்தில் வெற்றிகர மாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளர் எஸ்.சின்னச்சாமி தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் டிசம்பர் 14ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது. சுவ ரொட்டி, துண்டறிக்கை அளித்து விரிவான முறையில் பிரச்சாரம் கொண்டு செல்வது. இந்த காத்தி ருப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக கோரிக்கைகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட நிர் வாகிகளை சந்தித்து ஆதரவு கோரு வது. நாடாளுமன்ற உறுப்பினர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற கோருவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இந்த ஆலோச னைக் கூட்டத்தில் ஒருங்கிணைப் புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ஆர். குமார், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கெம்கோ ரத்தினசாமி, கொ.ம.தே.க. ஒருங்கி ணைந்த விவசாயி அணி மாவட்ட செயலாளர் கே.தேவராஜ், இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் வி.பி.பழனிசாமி, அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் சி.சுப்பி ரமணியம், மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம்,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.

மேலும் கூட்டத் திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் பி.சோமசுந்த ரம் ஆதரவு தெரிவித்தார்.

;