districts

புதிய சம்பள ஒப்பந்தம் கோரி டிச.21 முதல் தொடர் இயக்கம்

திருப்பூர், டிச. 10 - திருப்பூர் பனியன் தொழிலா ளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடர் இயக்கம் நடத்துவது என்று அனைத்து பனி யன் தொழிற்சங்கங்களின் கூட் டுக்குழு முடிவு செய்துள்ளது. அனைத்து பனியன் தொழிற் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம் ஏஐடியுசி அலுவலகத்தில் அந்த சங்கத்தின் துணைத் தலைவர் கே.எம்.இசாக் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் என்.சேகர், சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளா ளர் அ.ஈஸ்வரமூர்த்தி, எல்பிஎப் துணைச் செயலாளர் பூபதி, ஐஎன் டியுசி செயலாளர் அ.சிவசாமி, தலை வர் அ.பெருமாள், எம்எல்எப் செய லாளர் மு.சம்பத், துணைச் செய லாளர் பெருமாள், எச்எம்எஸ் மாவட்ட பொதுச் செயலாளர் முத்து சாமி ஆகியோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்: திருப்பூரில் பெரும் பாலான பனியன் கம்பெனிகளில் தொழிற்சாலை சட்டம், தொழிலா ளர் நலச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்துவது இல்லை. குறிப் பாக ஒரே கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களில் இரண்டு, மூன்று விதமான சதவி கிதங்களில் போனஸ் வழங்கப்பட் டுள்ளது. மிகைநேர (ஓவர்டைம்) வேலைக்கு இரட்டிப்புச் சம்ப ளம் தருவதில்லை, பல கம்பெனிக ளில் குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை சட்டவிரோதமாக வேலை வாங்கப் படுகிறது. சட்டத்துக்குப் புறம்பாக பெரும்பாலான கம்பெனிகளில் காண்ட்ராக்ட் முறையில் தொழி லாளர்கள் வேலைக்கு அமர்த்தப் படுகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது. இது போன்ற சட்ட விதிமுறை மீறல் களை தடுக்கவும், தொழிற்சாலை, தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக முழுமையாக அமலாக் கவும் வலியுறுத்தி தொழிலாளர் துறை துணை ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அளிப்பதென முடிவு செய்யப் பட்டது. திருப்பூர் பனியன் தொழிலா ளர்களுக்கு சம்பள ஒப்பந்தம் 2016ல் போடப்பட்டு 2020 மார்ச் மாதம் முடிவடைந்துவிட்டது. புதிய சம்பள உயர்வு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை அனைத்து சங்கங்கள் சார்பில் கடந்த 2020 ஜனவரி மாதம் முதலாளிகள் சங்கங் களுக்குக் கொடுக்கப்பட்டது. பத்து மாதங்கள் கடந்தும் இன்றுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் முதலாளிகள் சங்கங்கள் காலம் கடத்தி வருகின்றன. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடு மையாக உயர்ந்துள்ள நிலையில் தொழிலாளர்கள் வாங்கும் சம்ப பளம் போதாமல் துயரத்தில் உள் ளனர். எனவே உடனடியாக சம் பள ஒப்பந்தம் நிறைவேற்ற வேண் டும். திருப்பூர்  மாவட்டத்தில் 3 லட் சத்துக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் இஎஸ்ஐ திட்டத் தில் சந்தாதாரர்களாக சேர்ந்துள்ளனர்.  இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சந்தா தொகையாக இஎஸ்ஐ நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். ஆனால்  திருப்பூரில் பூண்டி சுற்றுச்சா லையில் நூறு படுக்கை வசதி இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதென இடம்வாங்கி   பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை கட்டுமானப் பணி  தொடங்கப்படவில்லை. ஆகவே இந்த மூன்று  கோரிக்கைகளை உள்ள டக்கி டிசம்பர் 18 ஆம் தேதி மனுக் கொடுப்பது, 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மாவட்டத்தில் 10 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, வீர பாண்டி பிரிவு, முதலிபாளையம் சிட்கோ, பாளையக்காடு, பெருமா நல்லூர், அனுப்பர்பாளையம், அவி நாசி, பல்லடம், ஊத்துக்குளி, உடு மலை ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தை நடத்துவது. இப் போராட்டத்தை வாழ்த்தி, கோரிக் கைகளை ஆதரித்துப் பேச அனைத்துக் கட்சி தலைவர்களை யும் அழைப்பது என்றும் இக்கூட் டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

;