districts

img

கொரோனா முடக்கக் காலத்தில் வசூலித்த அபராத வட்டியை திருப்பித் தர பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 29 – கொரோனா பொது முடக்கக் காலத்தில் வாடிக்கையாளர்களி டம் பல்வேறு வங்கிகள் வசூல் செய்த அபராத வட்டித் தொகையை அவர்களுக்குத் திருப் பித் தர நடவடிக்கை எடுக்குமாறு  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர்  பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அண்மையில் அவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கு  எழு திய கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில்  மக்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தக, சேவைத் துறை யினருக்கும் மத்திய அரசு,  வங்கி களில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கியது.

எனினும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நுண்கடன் நிதி நிறு வனங்கள் அரசின்  இந்த அறி விப்பை பொருட்படுத்தாமல் பொது முடக்கக் காலத்தில் வட்டி வசூலிப்பதிலும்,  வட்டியைச் செலுத்தாதவர்களிடம் வங்கிக் கணக்கில் இருந்து தானடித்த மூப்பாக பணத்தைப் பிடித்தம் செய்து கொண்டது, வட்டிக்கு வட்டி, அபராத வட்டியும் வசூ லித்தனர்.  இதனால் பாதிக்கப்பட்டவர் கள் நியாயம் கோரி உச்சநீதி மன்றத்தை நாடினர்.  உச்சநீதிமன் றத்தில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று, இப்பிரச்சனையில் தெளிவான  வழிகாட்டுதல், உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கின்போது, 13  கோடியே  20 லட்சம்  பேரின்  வங்கிக்  கணக்குக ளுக்கு  வட்டிக்கு  வட்டியாக வசூ லிக்கப்பட்ட ரூ.4,300 கோடியை திரும்பச் செலுத்தி இருப்பதாக மத்திய அரசு  நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது.

 குறிப்பாக, ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட,  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களின் கடன்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்,  இந்த வங்கிகளில் சிறு, நடுத்தர, குறுந் தொழில்  கடன்கள்  முதல்  நுகர் வோர்  கடன்  வரை  பல வகை கடன் களுக்கும் வட்டிக்கு வட்டியாக வசூ லிக்கப்பட்ட தொகையைத் திரும் பத் தரும் திட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்ற உத்தரவில் தெளி வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் முதல் தனிநபர் வங்கி கணக்கு  வைத்தி ருப்போர் வரை, ஆயிரக்கணக் கானோரிடம் கட்டாயப்படுத்தி வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட் டுள்ளது.

இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் முரண்பா டானதும்,  எதிரானதும் ஆகும். எனவே, இங்கு வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்டத் தொகையை உச்சநீதிமன்ற உத்தர வின்  அடிப்படையிலும், மத்திய அரசு இந்த நிதியை வழங்கியி ருக்கும் சூழலிலும், மீண்டும்  சம் பந்தப்பட்ட நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். வங்கிகள்  இத்தொகையை செலுத் துவதை மாவட்ட நிர்வாகம் உறு திப்படுத்த வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டுக் கொண்டார்.

;