districts

நெல்லையில் தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.50க்கு விற்பனை

திருநெல்வேலி,ஜூன் 5- நெல்லை மாநகரில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந் துள்ளது. கிலோ ரூ.40க்கு விற்கப்பட்ட தக் காளி ரூ.10 உயர்ந்து தற்போது ரூ.50க்கு விற்ப னை செய்யப்படுகிறது.

நெல்லை டவுனில் உள்ள நயி னார்குளம் மொத்த மார்க்கெட்டிற்கும், பாளை.  மகாராஜநகர் உழவர் சந்தை க்கும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் அருகேயுள்ள வட்டார விவசாயிகளிடம் இருந்தும் அதிக அளவில் தக்காளிகள் மொத்தமாக விற்பனைக்கு வருகின்றன. சமீப காலமாக நெல்லை சுற்றுவட்டார பகுதி விவ சாயிகளிடமிருந்து தக்காளி விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்தது . இத னால் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹைபிரிட் வகை தக்காளிகள் நெல்லைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே நாட்டு தக்காளி களின் வரத்து குறைவால் அதன் விலை எகிறியுள்ளது. 

இந்த நிலையில் நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தை, டவுன் நயி னார்குளம் காய்கனி சந்தை உள்ளிட்ட சந்தைகளில் உள்ள மொத்த வியாபாரி கள்ஆந்திர மாநில தக்காளிகளை அதிகளவு வாங்குவதால் அவற்றுக்கு கிராக்கி ஏற் பட்டுள்ளது. இதனால் அந்த ஹைபிரிட் ரக தக்காளிகளின் விலை யும் உயர்ந்துள்ளது. நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட ஆந்திரா தக் காளி ரூ.50க்கு விற்பனை செய் யப்பட்டது. 

நயினார்குளம் காய் கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.48 முதல் ரூ.53 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையானது. இதனால் கடைகளில் நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75க்கு விற்பனை யானது. ஹைபிரிட் வகை தக்காளிகள் ரூ.60 முதல். ரூ.65க்கு விற்பனை செய்யப் பட்டது.

;