districts

img

நாகையில் கனமழை; நிரம்பி வழியும் நீர்நிலைகள்

நாகப்பட்டினம், டிச.16 - வடகிழக்குப் பருவமழை துவங்கி கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்து வரும் வேளையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சனிக்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி விட்டன. சம்பா பயிர்கள் தண்டு பிரிந்து  நெற்கதிர் உருவாகி வெளிவரும் நிலை யில் உள்ளன. தற்போதைய அதிகப்படி யான மழை மற்றும் இயல்பை விட அதிகமாக சுழன்றடிக்கும் காற்று போன்ற வற்றால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கால்நடைகளுக்கு போதிய உணவு கிடைக்காததால் சாலை யோரங்களில் சுற்றித் திரிகின்றன. கடற்கரையோர கிராமங்களில் பயிரிடப்பட்ட காய்கறிச் செடிகள் வேரழு கள் நோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும்  அழிந்துவிட்டன. கத்தரி, புடலை, வெண்டி, பரங்கி, சுரை, கொத்தவரை, வெள்ளரி உள்ளிட்ட பயிர்கள் முற்றி லும் பாதிப்புக்குள்ளாகி விளைச்சல் தடைபட்டு விட்டது. ஏற்கனவே பெய்த  மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியா மல் இருக்கும் வேளையில், இந்த மழை யானது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி, காரப்பிடாகை, காமேஸ்வரம், விழுந்த மாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரணி ருப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அலம் பகுதி (அலம் - பயிர் செய்வ தற்கு பழக்கப்படாத இடம்) மழை நீரால் நிரம்பி வழிகிறது. அலத்தில் சேமிக்கப்படும் மழை நீரானது காலப் போக்கில் கடலில் சென்று கலந்து விடும். பார்ப்பதற்கு பெரிய அணைக் கட்டு போல் காட்சி அளிக்கும் அலத்தில்  தற்போது நீர் நிரம்பி வழிகிறது.