districts

திருச்சி முக்கிய செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பெரம்பலூர், டிச.7 - சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப் பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது  குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.  கபீர் புரஸ்கார் விருது 2022-க்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் விளையாட்டு அலுவலகத்தில் நேரில் வந்து  பெற்று கொள்ளலாம். மேற்கண்ட விருது தொடர்பான பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8.12.2021 தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில்  சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மேற்கண்ட விருது தொடர்பாக  இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (தொ.பெ. எண்.7401703516) பெற்றுக் கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான  ஆளுமை மேம்பாட்டு பயிற்சி

கும்பகோணம், டிச.7 - டிசம்பர் 6 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு  நாளையொட்டி விடுதலை சிறுத்தை கட்சியின் டெல்டா  மாவட்ட இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒருங்கி ணைக்கும் இளைஞர்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சி  வகுப்பு கும்பகோணம் ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில  செயலாளர் குடந்தை தமிழினி தலைமை வகித்தார். தாய்  சாவித்திரிபாய் பெண்கள் இயக்க பொறுப்பாளர் வெளிச்சம் ஷரின் இளைஞர்களுக்கு பயிற்சி குறித்து விளக்க உரை யாற்றினார். விசிக மாவட்ட செயலாளர் உறவழகன், மாவட்ட  துணை செயலாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் முருக தாஸ் உள்ளிட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை இளைஞர்கள்  கலந்து கொண்டனர். 

போதைப் பொருட்களின் தீமை: விழிப்புணர்வு பேரணி 

அறந்தாங்கி, டிச.7 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும்  அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும்  கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி  ஆவுடையார்கோவில் நான்கு வீதியில் நடைபெற்றது. இந்த  பேரணியில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ-மாணவிகள், பதா கைகளை கையில் ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தினர். பேரணியை கல்லூரி முதல்வர் இரா.கண்ணன்  தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். தமிழ்துறை பேராசிரி யர் எம்.பழனிதுரை விழிப்புணர்வு கருத்துரையாற்றினார். 

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி 

தஞ்சாவூர், டிச.7 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனி வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பள்ளி தலைமையாசிரியர் கலா வரவேற்றார். ஊராட்சி  மன்றத் தலைவர் ரமா குமார் தலைமை வகித்து, கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார  ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,  பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து  கொண்டனர்.

பாபநாசத்தில்  டிச.10,11 மக்கள் நீதிமன்றம்

பாபநாசம், டிச. 7 - தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்த லின்படி பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் டிசம்பர்  10, 11 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நீதிமன்ற வளாகத்தில் நடை பெற உள்ளது. இதன் மூலம் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாக வும் முடித்துக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் வழக்காடிகள் டிச.10,11 ஆகிய இரு தினங்க ளில் பங்குபெற்று பயன்பெறலாம்.  பாபநாசம் நீதிமன்றத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத் தில் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு  முன்னிலையில் சமரசத்தீர்வு நடைபெறும். இந்த மக்கள் நீதி மன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்பந்த மான ரிட் மனுக்கள், செக் மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்கு கள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன்,  வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படும். வழக்குகளில் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று  வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. மக்கள் நீதிமன்றங்கள் இழப்பீட்டுத் தொகை, பிற பிரச்சனைகளை இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்க வழிவகை செய்கிறது. மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் கலந்துக் கொண்டு தங்கள் வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ள  வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் நீதிமன்றமானது  பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட  உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவருமாகிய செ. சிவகுமார் தலைமையில் நடைபெறுகிறது.

மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பாபநாசம், டிச. 7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு பசுமை  போர்வைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் காடுகள் வளர்ப்பதன் மூலம் கூடுதல் வருவாய் பெற இயலும். மழைப் பொழிவை அதிகரிக்கவும், காற்று மாசி னைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்ப டுத்தவும் வழி ஏற்படும்.  இந்த நோக்கங்களுக்காக தமிழ்நாடு பசுமை போர்வைத் திட்டத்தின் கீழ் பாப நாசம் வட்டாரத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில்  9800 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. இத் திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு, தங்கள் நிலங்களில் வரப்பு பயிர்  முறையில் ஒரு ஏக்கருக்கு 50 மரக்கன்று களும், தனிப் பயிராக மதிப்பிட்டால் ஒரு ஏக்க ருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது.  எதிர்வரும் ஆண்டுகளில் உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றிற்கு ரூ.7 வீதம் 3  ஆண்டுகளுக்கு பராமரிப்பு தொகை வழங்கப் படும். தேக்கு, ரோஸ்வுட், வேங்கை, செம் மரம், மலை வேம்பு, உள்ளிட்ட மரக்கன்றுகள்  தஞ்சை வனத்துறை நாற்றாங்காலில் உற்பத்தி  செய்யப்பட்டு விநியோகிக்க தயார் நிலை யில் உள்ளது. பாபநாசம் வட்டாரத்தில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மரக் கன்று கள் வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயி கள் விண்ணப்பத்தினை பூர்த்திச் செய்து ஆதார் நகல், வங்கி புத்தக நகல், கணினி சிட்டா, புகைப்படம் உள்ளிட்டவற்றை இணைத்து தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெற லாம் என கூறப்பட்டுள்ளது.

பழைய ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றாதது ஏன்?

கரூர், டிச. 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ் ணராயபுரம் ஒன்றியக்குழு கூட்டம் பழைய ஜெயங்கொண்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கா.கந்தசாமி, மாவட்டக்  குழு உறுப்பினர் ஜி.ராஜா, ஒன்றிய செயலா ளர் ஜி.தர்மலிங்கம் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.                       பழைய ஜெயங்கொண்டம் குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடன டியாக அந்த மதுக்கடையை அப்புறப்படுத்த கோரி ஏற்கனவே போராட்டங்கள் நடத்தப் பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ஒரு  மாதத்தில் கடையை அப்புறப்ப டுத்திவிடுவோம் என்று உறுதியளித்ததின் அடிப்படையில்  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம், இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  அதே இடத்தில் தொடர்ந்து அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு வன்மையாக கண்டிப்பது டன், உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மதுக்கடையை அப்புறப்படுத் திட வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத் தில் பொதுமக்களை திரட்டி, கட்சியின் தலை மையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடன் பிரச்சனையால்  மகனை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை

தஞ்சாவூர், டிச. 7 - கடன் பிரச்சனை காரணமாக மகனை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தஞ்சாவூர் அருகே மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா(38). ரியல் எஸ்டேட்  தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவை யாறில் தேநீர் கடை நடத்தி வந்தார். இவரது  மனைவி கனகதுர்கா(32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து  வந்தார். இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத் துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தக வலில், கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ராஜா கூறியுள்ளார். இது குறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளப் பெரம்பூர் காவல்துறையினர் திங்கள்கிழமை சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும் போது, குடும்பத்துடன் ராஜா இறந்து கிடந்தார். மூவரின் உடலையும்  காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராஜாவுக்கு வணிகத்தில் கடன் சுமை அதிக ரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொருவருக்கு விற்றுள்ளார். ஆனால்  வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜா வுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன்  நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மக னைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன்  மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டது தெரியவந்தது.

;