தென்காசி ,ஜூலை 24
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திங்க ளன்று காலை முதல் மேகமூட்டத்துடன் இதமான சாரல் மழை விழுந்து கொண்டு இருந்தது அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக் கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர் மெயின்அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இடை யில் நீர்வரத்து குறைந்ததால் தொடர்ந்து குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்பட்டனர். குற்றாலம் காவல்துறை சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.