தஞ்சாவூர், ஜூலை 4-
பட்டுக்கோட்டை வட்டாரத்தில், குறுவை சாகுபடியில் நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற லாம் என பட்டுக்கோட்டை வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் ச.மாலதி தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நெல் விளைச்சலில், 40 விழுக்காடு உர நிர்வாகத்தை பொறுத்து அமைகிறது. நுண்ணூட்டச் சத்தினை, சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பதன் மூலம், நிலவளத்தை பாதுகாத்து விளைச் சலை அதிகரிக்க முடியும்.
மண் பரிசோதனை அடிப்படையில் நெற்பயிருக்கு அடியுரம் மற்றும் வேதி யியல் உரங்களை இடவேண்டும். இதனால் மண்ணில் இருந்து பயிருக்கு கிடைக்கும் உரத்தின் அளவையும் பயிரின் உரத் தேவை யும் தீர்மானிக்கலாம்.
இதனால் தேவைக்கு குறைவான அல்லது அதிகமாக உரமிடுவதை தவிர்க்க லாம். நெல்லில் அடி உரமிடுதல், ஒரு ஏக்க ருக்கு பத்து கிலோ ஜிங்க் சல்பேட்டை மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இட வேண்டும். அல்லது வேளாண்மை துறையின் கீழ் விநியோகம் செய்யப்படும் நெல் நுண்ணூட்டக் கலவையை, ஏக்க ருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மண லுடன் கலந்து கடைசி உழவின் போது அடி யுரமாக வயலில் இடுவதன் மூலம் நெல்லில் அதிகமான சிம்புகள் வெடித்து தூர் பிடிப் பதை அதிகரிக்கும் திறனை பெற்றுள்ளது.
வயலில் ஒரு ஏக்கருக்கு 2.5 டன் தழை உரம் அல்லது நெல் நுண்ணூட்டக் கலவை இடப்பட்டிருப்பின் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ ஜிங்க் சல்பேட் போதுமானதாகும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ள மண்ணாக இருப்பின், 20 கிலோ பெரசல்பேட்டை 5 டன் தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நெல் நுண்ணூட்ட கலவை வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட் பத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மாக மகசூல் பெறலாம்” என தெரிவிக்கப பட்டுள்ளது.