திருவாரூர், மே 3- மே தின சிஐடியு பெயர்ப் பலகையை சேதப்படுத் திய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. மே தினத்தன்று திருவாரூர் மாவட்டம் காட்டூ ரில் உள்ள கலைஞர் கோட்டம் அருகில் திருவாரூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) சார்பாக புதிய கொடிமரத்தில் அமைப்பின் தலைவர் ஏ.ஒன்.மணி கொடியேற்றி னார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, மாவட்ட நிர்வாகிகள் கே.கஜேந்திரன், கே.ராஜேந்தி ரன், நகர ஆட்டோ சங்க செயலாளர் எம்.ராஜேந்தி ரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, மே தின கொடி யேற்றி பெயர்ப் பலகை திறக்கப்பட்டது. சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பாக திறக்கப்பட்ட சங்க கிளையின் பெயர் பலகை, வியாழக்கிழமை இரவு சமூக விரோதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு கிழிக்கப் பட்டுள்ளது. இச்செயலை செய்த சமூக விரோதி களை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயலுக்கு சிஐ டியு மாவட்டக் குழுவின் சார்பாக கண்டனம் தெரி விக்கப்பட்டது. காட்டூரில் புதிதாக அமைக்கப்பட்ட சிஐடியு பெயர் பலகையை சிதைத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக் கையை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் எடுக்க வேண்டும். கலைஞர் கோட்டம் அருகில் மீண்டும் சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் பெயர் பலகையை அமைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.