districts

img

கழிவுநீர் செல்ல வழியில்லை; உள்ளிக்கான் தெரு மக்கள் அவதி

கும்பகோணம், மே 29 - கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிழக்கு உள்ளிக்கான் தெருவில் பாதாளச் சாக்கடை செயல்படாததால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி யுள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் பழைய பேருந்து நிலைய கிளை சார்பாக மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் மாநகராட்சி 24 ஆவது  வார்டைச் சேர்ந்த கிழக்கு உள்ளிக்கான் சந்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து  வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கழிவுநீர் செல்வதற்கான பாதை இல்லை.  ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே இருந்த கழிவுநீர் தொட்டியும்  சீர் செய்யப்படாமல் உள்ளது.  இதனால் இப்பகுதி மக்கள் துர்நாற் றம், கொசுத் தொல்லையால் மிகவும் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு,  நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.  மழைக் காலங்களில் தேங்கியுள்ள சாக்கடை நீர், மழை நீருடன் கலந்து  இப்பகுதி முழுவதுமே சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் பல  முறை கோரிக்கை வைத்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இக்குடி யிருப்பு வாசிகள் அனைவரும் மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து  வரிகளையும் நிலுவையின்றி செலுத்தி யுள்ளனர். எனவே, மாநகராட்சி ஆணையர் உடனடியாக மேற்படி இடத்தை பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க ஏற்பாடு செய்து மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழிசெய்ய வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையரை சந்தித்து மனு கொடுக் கும் நிகழ்வில், சிபிஎம் கிளைச் செயலா ளர் இராமமூர்த்தி, ஆர்.இராஜகோ பால், அறிவுராணி, கே.பக்கிரிசாமி, ஜி. கண்ணன், சாரங்கன் மற்றும் உள்ளிக் கான் சந்து பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பின்பு ஆணையர் விரைவில் நேரில்  பார்வையிடுவதாகவும், மாநகராட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கூட்டப் பொருளாக வைத்து கழிவுநீர்  பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித் தார்.

;