districts

img

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தை விரைந்து சீரமைத்திடுக!

திருச்சிராப்பள்ளி, நவ. 24 - 108 வைணவ தலங்களில் முதன் மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் 7 திருச்சுற்று கள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமைந்துள்ளது.  ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டு  முழுவதும் விழாக்கள் நடைபெறுவ தால், கோவிலுக்கு தினசரி தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து  தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில் கீழசித்திரை வீதி யையும், கீழஅடையவளஞ்சான் வீதி யையும் இணைக்கும் சாலையில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரம் உள்ளது. இது 8 நிலைகளை கொண் டது. இதில் கோபுரத்தின் கீழி லிருந்து ஒன்று மற்றும் இரண்டாவது  நிலைகளில் உள்ள கொடுங்கை களில் (சன்சேடு) ஏற்கனவே சிறிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5  அன்று அதிகாலை கிழக்கு கோபுரத் தில் முதல்நிலையின் கொடுங்கை (சன்சேடு) இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அதிகாலை நடந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட வில்லை.

இதையடுத்து கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக அந்த சாலை மூடப்பட்டது.  சாலை மூடப்பட்டு பல மாதங்கள்  ஆகியும் கோபுர பணியை துவங்கா மல் இருக்கும் கோவில் நிர்வா கத்தை கண்டித்தும், இந்த சாலை வழியாக சென்று வந்த பள்ளி மாணவர் கள், பொதுமக்கள், பக்தர்கள் ஒரு  கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதை  தவிர்க்கவும் கோபுர பணியை துவக்கி  விரைந்து முடிக்க வேண்டும்.  விரைவில் இச்சாலையை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு  வர வலியுறுத்தி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சார்பில் கிழக்கு  வாசல் கோபுரம் முன்பு வெள்ளி யன்று தமுக்கடிக்கும் நூதன போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க  ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் சந்துரு  தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டப் பொருளாளர் நவநீதகிருஷ்ணன், பகுதி தலைவர் லோகநாதன், பகுதி துணைத் தலை வர் ஜெய்குமார் ஆகியோர் பேசினர். இதில் சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க பகுதி பொருளாளர் ரெங்கராஜ் நன்றி  கூறினார்.