தஞ்சாவூர், மே 20-
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் காடுவெட்டி விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
வானவில் மன்றம் சார்பாக நடைபெற்ற அறிவியல் திருவிழா விற்கு, திருவோணம் வட்டார கல்வி அலுவலர்கள் ச.முபாரக், ப.மான் விழி தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரன், தலைமையாசிரியர் ச.கர்ணன் வழிகாட்டுதலின் பேரில், வானவில் மன்ற திருவோணம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பர்வீனா, பிரியதர்ஷினி, துர்கா ஆகியோர், உயர் தொடக்க நிலை வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, எளிய முறையில் அறிவி யல் செய்முறைகள் செய்து காட்டினர்.
பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடனும் அறிவியல் கற்றல் செயல்பாடுகளை கற்றுக் கொண்டனர். நிறைவாக, இல்லம் தேடிக் கல்வி திருவோணம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகராஜ் நன்றி கூறினார்.