districts

தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் குன்னூருக்கு இடமாற்றம்

தஞ்சாவூர், டிச. 1- தஞ்சாவூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதி வாளர் குன்னூருக்கு அதிரடி யாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலா ளர் முகமது நஜிமுதீன், நவ. 30 ஆம் தேதி செவ்வாய்க்கி ழமை பணியிட மாறுதல்  ஆணையை குமாரசுந்தரத் துக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆணையில், “கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர்  பரிந்துரைத்த கருத்துகளை ஏற்று, தஞ்சாவூர் சரக கூட்டு றவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் குமாரசுந்தரம், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்கு நராக பணியிட மாற்றம் செய் யப்படுகிறார். புதிய பணியி டத்தில் உடனடியாக பணி யில் சேர வேண்டும். மாற்று  பணியிட கோரிக்கையையோ, விடுப்பு விண்ணப்பத்தையோ ஏற்க முடியாது” என தெரி விக்கப்பட்டுள்ளது.