districts

img

தஞ்சை பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் பெண்கள் விரட்டியடிப்பு

தஞ்சாவூர், ஜூலை 11-  

       விளிம்பு நிலை மக்களான நரிக்குறவர் இனத்  தைச் சேர்ந்தவர்கள் ஊசி, மணி, பாசி, ஊக்கு,  சீப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பல வருடங்க ளாக விற்று வந்தனர். தற்போது அவர்களை பொருட்கள் விற்பனை செய்யவிடாமல் விரட்டி  அடிக்கப்படும் நிலை உள்ளது.

      இந்நிலையில் நரிக்குறவர் இனப் பெண் களுக்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வா கம் உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி, தஞ்சை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு தலை மையில், நரிக்குறவ சமுதாயப் பெண்கள் மனு  அளித்தனர்.  

    தஞ்சாவூர் மாநகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக ஊசி, பாசிமணி மற்றும்  நரிக்குறவப் பெண்களால் சுயமாக தயாரிக்கப் படும் பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு  நடத்தி வருகின்றனர்.

   இவர்கள் பேருந்து நிலை யப் பகுதிக்குள் விற்பனை செய்ய அங்குள்ள ஒரு  சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதுகுறித்து அறிந்த தஞ்சாவூர் மாவட்ட முறைசாரா உடலுழைப்பு தொழிற்சங்க (சிஐ டியு) நிர்வாகிகள் தலையிட்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரும் உடனடி யாக தீர்வு கண்டு, நரிக்குறவப் பெண்கள் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தார். அதனை செயல்படுத்திட தஞ்சாவூர் மாநகராட்சி ஆணை யருக்கும் உத்தரவிடப்பட்டது.

     தற்போது சில நாட்களாக, பேருந்து நிலை யத்தில் கடை நடத்தி வரும் ஒரு சில நபர்கள், பழங்குடியின நரிக்குறவர்கள் பேருந்து நிலை யத்திற்குள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரி வித்து விரட்டியுள்ளனர். மேலும் அப்பெண்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பொருட்  களை பறித்து கீழே வீசியும், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியும் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.  

   இதனைக் கேள்விப்பட்ட, சிஐடியு தஞ்சாவூர்  மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலை மையில் மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிஐ டியு மாவட்டக் குழு உறுப்பினர் மாதவன், ஆட்டோ சங்க நகர துணைத் தலைவர் செல்வம்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன் மற்றும் பழங்குடியின நரிக்குறவ பெண்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

     உடனடியாக இப்பிரச்சனையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நரிக்குறவப் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.