பாபநாசம், ஜூலை 8 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் சார்பில் இலுப்பக்கோரை அங்கன்வாடி பள்ளிக்கு, மாணவர்கள் பயன்பெறும் வகையில் 15 நாற்காலிகள், மின் விசிறிகள் வழங்கப்பட்டன. பசுபதிகோயில் அங்கன்வாடி பள்ளிக்கு மின் விசிறிகள், கட்டடத் தொழிலாளிகள் 3 பேருக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான மளிகை சாமான்கள், அய்யம்பேட்டையைச் சுற்றியுள்ள பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 20 பேருக்கு பணப்பரிசு வழங்கப் பட்டது. இதில் தலைவர் விஜயராஜன், செயலர் சுரேஷ், பொருளாளர் முகமது இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்ற னர்.