districts

img

தலைஞாயிறு பேரூராட்சி 12 ஆவது வார்டில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்: சிபிஎம் வேட்பாளர் சுபாஷினி வாக்குறுதி

நன்னிலம், பிப்.14 -  திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியத்தில் நன்னிலம் மற்றும் பேரளம் ஆகிய நகரங்க ளில் 2 தேர்வுநிலை பேரூராட்சி உள்ளது. இதில் பேரளம் பேரூ ராட்சி வார்டு தேர்தலில் போட்டியி டும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் போட்டியிடும் வேட்பாளர்க ளுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர்  ஜி.சுந்தரமூர்த்தி வாக்கு சேகரித் தார். பேரளம் 1 ஆவது வார்டு சிபிஎம்  வேட்பாளர் சித்ரா மனோகரன், 12 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.ராஜா ஆகி யோருக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கும், திமுக  சார்பாக பேரளம் பேரூராட்சி வார்டு தேர்தலில் 2ஆவது, 5 ஆவது, 9 ஆவது வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலை மையில் வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம்,  மாவட் டகுழு உறுப்பினர் டி.வீரபாண் டியன், மாவட்ட கவுன்சிலர் ஜெ. முகமதுஉதுமான், பேரளம் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன், ஒன்றிய தலைவர் பி.ஜெயசீலன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யினர் வாக்குச் சேகரித்தனர்.