districts

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்துக!

திருவாரூர், நவ.21 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்  கீழ் அனைத்து பயனாளர்களுக்கும் வேலை வழங்கிட வேண்டும். வேலைக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.  ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலையை குறைத்திட வேண்டும். பெண்களுக்கு எதிரான  பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில்  அனைத்து ஒன்றியங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட 5000 கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர். இதில் மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, பொருளாளர் ஆர். சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.