பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மருதன்கோன்விடுதி அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.பாலாஜி, மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், துணைச் செயலாளர் எஸ்.பிரியங்கா, செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுருதி, அன்பரசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வசந்தகுமார், மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்வேல், நகர் தலைவர் எஸ்.மகாலெட்சுமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.