districts

img

சாலை விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னமராவதி, டிச.16 - பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் உள்ள சந்தைபேட்டை சாலை, அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல் சாலை, புதுவளவு சாலை உள்ளிட்ட பகுதி களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவ தால் பல்வேறு விபத்துகள் நிகழ்கின்றன. புதன்கிழமை அன்று இரவு அண்ணா  சாலையில் கால்நடைகள் மீது மோதி இரு சக்கர வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானது. தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ளது போல்  பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதித்து வாகன விபத்துகளை தடுக்க பொன்னமராவதி பேரூ ராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.