districts

img

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

திருவாரூர், டிச.12- தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில அளவிலான மத்திய செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று திருவாரூரில் முன்னாள் பொது செயலாளர் எல்.ஈஸ்வரானந்தம் நினைவரங்கில் நடைபெற்றது.  இதற்கு, மாநிலத் தலைவர் கு.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.மகேஷ் வரவேற்றார். மாநி லச் செயலாளர் எஸ்.சங்கர லிங்கம், மாநில பொதுச்செய லாளர் எம்.பி.முருகையன், மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர். மாவட்ட வருவாய் அலுவலர் பி.சிதம்பரம் வாழ்த் துரை வழங்கினார். மாநில நிர்வா கிகளும் மாநிலம் முழுவதிலி ருந்தும் வந்திருந்த பிரதிநிதிக ளும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட சங்கத்திற்கான இணைய தளத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் வே.சோம சுந்தரம் நன்றி கூறினார். கூட்டத்தில், தமிழக முதல மைச்சர் அரசு அலுவலர் பயிற்சிக ளை மாவட்ட தலைநகரில் நடத்த அரசாணை பிறப்பித்ததை தொடர்ந்து ஒரத்தநாடு நில அளவை பயிற்சியினை 15.03.2022 முன்பாக வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும், வருங்காலங்களில் பட்டதாரி அல்லாத அலுவலர்க ளுக்கு விகிதாச்சார அடிப்படை யில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;