districts

img

சாக்கடையாக மாறிய பாசன வாய்க்கால்

பாபநாசம், மே 29 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மெயின் சாலையை ஒட்டிச் செல்லும் அன்னுக் குடி பாசன வாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அன்னுக்குடி பாசன வாய்க்காலால் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குடமுருட்டி ஆற்றின் தலைப்பி லிருந்து மெயின் சாலையை ஒட்டிச் செல்லும்  இந்த பாசன வாய்க்கால் தற்போது தூர்வாரப்  படுகிறது. அன்னுக்குடி வரைச் செல்லும் இந்த பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்றி, முறையாக அளவீடு செய்து  தூர்வார வேண்டும். பெயரளவில் மட்டுமே இந்த தூர்வாரல் நடக்க கூடாது. பட்டா இடத்தில் கொட்டப்ப டும் தூர்வாரும் மண் உடனே அகற்றப்பட வேண்டும். இந்த பாசன வாய்க்கால் சாக்க டையாக மாறி விட்டது. வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் நேர டியாக கண்காணிக்க வேண்டும்” என்றனர்.

;