மயிலாடுதுறை, டிச.17 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரப் பகுதிகளில் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் ஆபத்தான சாலை வளைவுகள், சாலை சந்திப்புகளில் விபத்துகளை தவி ர்க்கும் வகையில் குவியாடி கண்ணாடிகள் அமைக்கப்பட்டு உள்ளதை பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வரவேற் றுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆய்வு கூட்ட அறிவுரையின்படி குத்தா லம் பேரூராட்சி பகுதிகளில் விபத் துக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மேலசெட்டிதெரு, பேருந்து நிலையம், பிள்ளை யார்கோயில் தெரு, தேரடித் தெரு, ராஜகோபாலபுரம் ஆகிய இடங்க ளில் தற்போது குவியாடிகள் அமைக் கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்ககளின் பாதுகாப்பை கருதி அமைக்கவுள்ளதாகவும் குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தெரிவித்தார்.