districts

img

கல்லூரி முதல்வராக பதவி உயர்வு: பேரா.சுந்தரராசனுக்கு பாராட்டு விழா

கும்பகோணம், பிப்.13-  கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி(தன்னாட்சி) யில் தேர்வு நெறியாளராக பணிபுரிந்து வரும் பேராசிரியர் இரா. சா. சுந்தரராசன், அரசு கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெறுவதால் கல்லூரி முதல்வர் மாதவி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பேராசிரியர் இரா.சா. சுந்தரராசன் 27 ஆண்டுகால பணியில் உதவிப் பேராசிரியராகவும், இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகவும், தேர்வு நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், நாக், கல்லூரியின் சில முக்கிய பொறுப்புகளில் இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்காக திறம்பட பணியாற்றியுள்ளார்.  இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசினர் கலை கல்லூரிக்கு  முதல்வராக பதவி உயர்வு பெற்றுச் செல்கிறார். அதை சிறப்பிக்கும் வகையில் கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்தி, பாராட்டி,  கல்லூரி சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் அ. மாதவி, மூத்த பேராசிரியர் மா. மீனாட்சிசுந்தரம், ஆட்சிமன்றக் குழுச் செயலர் சீ.தங்கராசு மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், நிதியாளர் கண்காணிப்பாளர் கலந்துகொண்டனர்.