திருச்சிராப்பள்ளி, ஜூன் 8 - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷ னல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி ஆகிய பொது காப்பீட்டு நிறுவனங்களில் பணி புரியக்கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, காப்பீட்டு நிறுவன தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பினர் கடந்த 58 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் 58 மாதங்களாக நிலுவை யில் உள்ள ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை உடனே துவக்கி விரைந்து தீர்வு காண வேண்டும். காப்பீட்டு நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக வழங்க வேண்டும். பென்சன் ஊதிய மாற்றத்திற்கு ஏற்ற வகையில் வரை யறை செய்ய வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகத்தில் புத னன்று ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் பொது இன்சூரன்ஸ், அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய அதிகாரிகள் சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலை வர்கள், நியூ இந்தியா அதிகாரிகள் சங்கம், ஜிஐஇஏஐஏ, ஐசிஇயூ, ஓய்வூதியம் பெறு வோர் சங்கத்தினர் பேசினர். மேலும் ஜூன் 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.