அரியலூர், ஆக.7-
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட் டன. ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமி ருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
இதில், மண்பாண்ட தொழிலா ளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் சோழமாதேவி மற்றும் ஓ.கூத்தூர் கிராமங்களைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் 20 பேர் அளித்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மழைக்காலங்களில் மண் பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரண மாக ரூ.5,000 வழங்கும். கடந்த 2 ஆண்டு களாக தமிழக அரசு மழைக்கால நிவார ணம் வழங்கவில்லை. இதனால், நாங் கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே, மழைக்கால நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.