districts

img

அறந்தாங்கியில் குதிரைவண்டி பந்தயம்

அறந்தாங்கி, ஜன.13 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கள்ளுச்சந்து குதிரைவண்டி கழகம் சார்பாக குதிரை வண்டி  பந்தயம் நடைபெற்றது.  இப்போட்டி பெரிய குதிரை, சின்ன குதிரை, புது குதிரை என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சென்னை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.  போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.1.60 லட்சம்  ரொக்கப் பரிசும், வெள்ளி சாட்டை கம்பும், நினைவுப் பரிசு கோப்பைகளும்   வழங்கப்பட்டன. அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.