districts

img

மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள வாக்குப்பதிவு

மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.