districts

 பேராவூரணி உழவர் வயல் தின விழா

தஞ்சாவூர், ஜூன் 7-

     பேராவூரணி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டம், மாநில விரிவாக்க  திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்  விவசாயிகளுக்கு உழவர் வயல் தின விழா செருவாவிடுதி வடக்கு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் த.விஜய ராமன் முன்னிலையில் நடைபெற்றது.  

    சாக்கோட்டை உழவர் பயிற்சி மையம் வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் அட்மா திட்ட இயக்குநர் பால சரஸ்வதி, பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர்  (பொ) எஸ்.இராணி, சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய  வேளாண்மை அலுவலர் எஸ்.கண்ணன், இயற்கை விவ சாயி கமலக்கண்ணன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.

    நிகழ்வில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு ஏற்படாத வகை யில், ரசாயன உரங்களை தவிர்த்து, உயிர் உரங்களை  பயன்படுத்துதலின் அவசியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அங்கக  உரங்கள் பயன்பாடு, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் தயா ரித்தல், இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்து தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்  பட்டது.  

    தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இயற்கை உயிர் உரங்கள், பூச்சி விரட்டிகள், பூச்சிக் கொல்லிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

   முன்னதாக, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன். செல்வி வரவேற்றார். வட்டார உதவி தொழில் நுட்ப மேலா ளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.