‘மாறுதலுக்கான வாசல் எக்காலத் துக்கும் திறந்தே இருக் கிறது’ என்ற வேளாண் விஞ்ஞானி நம்மாழ் வாரின் சொல்லிற்கிணங்க இக்காலம் இயற்கை வேளாண்மையை நோக்கி மாற்ற மடைந்து கொண்டுள்ளது. எவ்வித ரசாயன தயாரிப்புகளும் இன்றி இயற்கை உரங்க ளான தொழு உரம் மற்றும் பசுந்தாள் உரம் போன்றவற்றோடு நுண்ணுயிர் உரங்கள் மற்றும் இயற்கை வழியில் தயாரிக்கப்படும் பயிர் ஊக்கிகள், பூச்சி விரட்டிகள் மற்றும் நோய் தடுப்பான்கள் முதலியவற்றைக் கொண்டு பயிர் சாகுபடி செய்வது இயற்கை வேளாண்மை எனக் கூறப்படுகின்றது. ரசாயன பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்த பயிர்கள் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்து பல்வேறு உலக நாடுகள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளத் தொடங்கின.
இந்தியாவின் நிலைப்பாடு
நம் இந்திய நாடு உணவு பாதுகாப்பை முழுமையாக எட்டியதையடுத்து தற்போது ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்தியா இயற்கை விவ சாய நிலப் பரப்பளவில் நான்காம் இடத்தை யும், உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. தேசிய அங்கக உற்பத்தி திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மொத்த பயிர் சாகுபடி நிலங்களில் 1.5 விழுக்காடு இயற்கை விவசாய நிலங்களாக உள்ளன. இந்திய அளவில் மத்திய பிரதேச மாநிலம் அதிகப்படியான இயற்கை விவசாய நிலங்களை கொண்டுள்ளது. இருப்பினும் முழுவதும் இயற்கை மயமாக மாற்றப்பட்ட பட்டியலில் முதல் இடத்தை சிக்கிம் மாநி லம் பெற்றுள்ளது. இவ்வாறான இயற்கை விவசாய நிலங் களில், இதர பயிர் வகைகளைக் காட்டிலும், எண்ணெய் வித்து பயிர்களே பெரிதும் சாகு படி செய்யப்படுகின்றன.
தமிழகத்தின் நிலைப்பாடு
தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவி லான நிலங்களில் மட்டுமே இயற்கை விவ சாயம் பின்பற்றப்படுகின்றது. இது ஒரு சதவீதத் திற்கும் குறைவாகவே உள்ளது. அவற்றுள் தோட்டக்கலை பயிர்கள் சற்றே முக்கியத் துவம் பெற்றுள்ளன. நீலகிரி, கோவை, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்கள் இயற்கை காய்கறி உற்பத்தியில் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
அங்ககச் சான்று
தமிழகத்தில் விளைவிக்கப்படும் இயற்கை விவசாயப் பயிர்கள் அனைத்தும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்பு துறை மூலம் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியமா கும். இத்துறை 2007 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. தேசிய அங்கக உற்பத்தி திட்டம் பரிந்து ரைத்த வழிமுறைகளின் படி இத்துறை செயல்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இயற்கை வேளாண்மை யில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. வயலில் சாகுபடி செய்யும் பயிர்கள் மட்டு மின்றி பண்ணையில் உள்ள கால்நடை களுக்கும் இச்சான்றிதழ் பெறலாம். இதில் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்ட தீவன வகைகளும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவைகளாக இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சமாக ஆண்டு பயிர்களுக்கு 24 மாதங்களும் பல்லாண்டு பயிர்களுக்கு 36 மாதங்களும் மாற்றுக் காலம் கடைப்பிடித் தல் வேண்டும். இயற்கை வேளாண் பொருட் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற் கும் அங்ககச் சான்றிதழ் அவசியமான ஒன்றா கும்.
சிறப்பு அம்சங்கள்
இயற்கை வேளாண்மையின் மூலம் மண்ணின் வளங்கள் அதிகரிப்பதோடு அவற்றின் தன்மைகளும் மேம்படுத்தப்படு கின்றன. ரசாயனங்களற்ற உணவுப் பொருட் களை இயற்கை வேளாண்மையின் மூலம் உற்பத்தி செய்திட இயலும். ‘உணவே மருந்து’ என்பதற்கு ஏற்ப, பல்வேறு வகைகளில் இயற்கை வேளாண் பொருட்கள் மனித உடல் நலத்தில் முக்கியத் துவங்கள் பெற்றுள்ளன. பல்வேறு உலக நாடுகளுக்கும் இயற்கை உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட முடியும். இயற்கை வேளாண்மையின் இடர்பாடுகள் இயற்கை வழி முறையில் வேளாண் நிலங்களை மாற்றுவதற்கு சற்றே கூடிய அளவிலான காலம் தேவைப்படுகின்றது. இதனால் பல்வேறு விவசாயிகள் இயற்கை வேளாண்மையை கடைபிடிக்க முற்படுவதில்லை. ஆரம்ப நிலையில் மகசூல் சற்றே குறையும் என்பது இதனை தவிர்ப்பதற்கு ஒரு காரணமாக அமைந்து விடு கின்றது. எனினும் தொடர்ச்சியாக பின்பற் றும்போது அதிக அளவிலான உற்பத்தியை காண இயலும்.
பயிற்சி
இயற்கை வேளாண்மை மற்றும் சான்ற ளிப்பின் முக்கியத்துவங்களை அறிவதற் காக ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன் மையர் முனைவர் அ.வேலாயுதம் வழிகாட்டு தலின் கீழ், தோட்டக்கலைத் துறை இணை பேராசிரியர் முனைவர் க.செ.விஜய் செல்வ ராஜ், பயிர் பெருக்கத்துறை உதவி பேராசிரி யர் முனைவர் செ.ஹரி ராமகிருஷ்ணன் ஆகி யோர் உதவியோடு இறுதி ஆண்டு மாணவர் கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த விதை சான்று மற்றும் அங்கங்க சான்று அலு வலகத்தில் சென்று பயிற்சி பெற்றனர். கட்டுரையாளர்: தோட்டக்கலைத் துறை இணை பேராசிரியர், ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.