districts

img

திருச்சேறையில் பரஸ்பர சகாய நிதி புதிய கிளை துவக்க விழா

கும்பகோணம், டிச.13 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே  உள்ள நாச்சியார்கோவிலை தலைமையி டமாக கொண்டு திருநறையூர் டவுன் பரஸ்பர  சகாய நிதி லிமிடெட் இயங்கி வருகிறது. அதன் கிளை நிறுவனமாக,அந்நிறுவனத்தின் புதிய கிளை திங்களன்று திருச்சேறை வடக்கு  வீதியில் துவங்கப்பட்டது.  திருச்சேறை புதிய கிளையை கோவிந்த புரம் ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தான் ஸ்தாபகர் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் திறந்து வைத்தார். நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சேதுரா மன், இயக்குனர்கள் கோபிநாதன், சுரேஷ், அனுசியா வாசுதேவன், சுப்ரமணியன், வெங்கடேசன், நாராயணன், அமுதா சரவ ணன், சௌந்தர்ராஜன் ஆகியோர் வரவேற்ற னர். துவக்க விழாவை முன்னிட்டு அந்நிறுவ னத்தில் வாடிக்கையாளர்கள் புதிதாக சேமிப்பு  மற்றும் வைப்பு கணக்கு தொடங்கினர்.

;