districts

img

நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேசினர்.