districts

img

தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ஐ.நா அங்கீகாரம் இரண்டாம் ஆண்டாக மறுப்பு

புதுதில்லி, மே 15- ஐநா தலைமையிலான தேசிய மனித உரிமைகள் முகமைகளின் உலக ளாவிய கூட்டமைப்பு (GANHRI) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் தேசிய மனித உரிமைகள்  ஆணையத்தின் (NHRC) அங்கீ காரத்தை மறுத்துள்ளது. மே மாத  தொடக்கத்தில் கூடிய அங்கீகார  துணைக் குழுவின் இந்த முடிவு,  மனித உரிமைகள் கவுன்சில் உட்பட இந்தியாவின் வாக்குரிமையை மோச மாக பாதிக்கும். தொடர்ந்து இரண்டு  ஆண்டுகளாக அங்கீகாரத்தை இழக்கும்  முதல் நாடாக இந்தியா உள்ளது. என்எச்ஆர்சி நியமனங்களில் வெளிப் படைத் தன்மை இல்லாமை, பெண்கள்  மற்றும் சிறுபான்மையினரின் பிரதி நிதித்துவம் இல்லாமை, விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகளை நியமிப்ப தில் உள்ள முரண்பாடுகள் ஆகி யவையே கடந்த ஆண்டு அங்கீகாரம் மறுக்கப்பட்டதற்கான காரணங்களா கும். அரசாங்கத்தின் தலையீட்டி லிருந்து என்எச்ஆர்சி விடுபடுவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடிய வில்லை என்று விமர்சிக்கப்பட்டது. என்எச்ஆர்சி- இல் கட்டமைப்பு மாற்றங் களை உலகளாவிய கூட்டமைப்பு பரிந்துரைத் துள்ளதாக தேசிய ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளாவிய கூட்டமைப்பின் 120  உறுப்பு நாடுகளில், 88 நாடுகள் ‘ஏ  கிரேடு’ அங்கீகாரத்தையும் 32 நாடுகள்  ‘பி’ கிரேடு அந்தஸ்தையும் பெற்று உள்ளன. இந்தியாவுக்கு முன்பு ‘ஏ கிரேடு’ அங்கீகாரம் இருந்தது. 1993 இல்  நடைமுறைக்கு வந்த பாரிஸ் கோட்பாடு களுக்கு முழுமையாக இணங்கும்  தேசிய மனித உரிமை நிறுவனங் களுக்கு ‘ஏ கிரேடு’ வழங்கப்படுகிறது.

;