districts

img

நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நாகப்பட்டினம், ஜன.6-  நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்ட வர் தர்காவின் 465 - ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்வு வரும் 14ஆம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது. கந்தூரி விழாவின் கொடியேற்றத் திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டு, கப்பல் வடிவ ரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணிசட்டி போன்ற வைகள் மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு ரதங்கள் மூலம் ஊர்வலமாக நாகையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தன.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக் கப்பட்டிருந்தது. பக்கீர்மார்கள் மற்றும் நாகூர் தர்கா முக்கியஸ்தர்கள் கொடி யினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூ-வா ஓதப்பட்டு வாண வேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடி யேற்றப்பட்டது. கந்தூரி விழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமி யர்கள் மற்றும் பிற மதத்தினர்  கலந்து கொண்டனர். கந்தூரி விழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாகை மற்றும் நாகூரில் 500,க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டிருந்தனர்.  நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத்-எனும் சந்தனக்கூடு விழா ஜனவரி 13 ஆம் தேதி நாகையிலிருந்து புறப்பட்டு 14 ஆம் தேதி அதிகாலை நாகூர் தர்கா வந்தடைந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.