districts

img

பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

புதுமைப் பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதல்வரின் முகவரித் திட்டம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் தி.சாரூஸ்ரீ  நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழக தலைவர் உ.மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து,மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.