districts

img

அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா

பொன்னமராவதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இல்ல திருமண விழா  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டியில் உள்ள மணமகள் இல்லத்தில்  அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அமைச்சர்கள் மெய்யநாதன், சாமிநாதன், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, நகரச் செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், பொன்னமராவதி ஒன்றியக் குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி அழகப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், அமைச்சர் ரகுபதியின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.