districts

img

மாநில உரிமை பாதுகாப்பு மாநாட்டிற்கு தயாராகும் மதுரை மாநகர்

மதுரை, ஜூலை 15-

    ஆளுநர் மூலம் மாநில உரி மைகளை பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண் டித்தும் மாநில உரிமைகளை பாது காப்போம் என்ற முழக்கத்தை முன்  வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் மதுரையில் “மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு”  ஜூலை - 23 ஞாயிற் றுக்கிழமை நடைபெறுகிறது.

   ஓபுளா படித்துறை அருகில்  நடைபெறுகின்ற மாநாட்டிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமை வகிக்கின்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச்  செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸ் மாநிலத்  தலைவர் கே. எஸ். அழகிரி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு செய லாளர் அ. ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் மொகி தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது,  அகில இந்திய பார்வேட் பிளாக்  பொதுச் செயலாளர் பி. வி. கதிர வன்,  கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர்.  ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கின்றனர். இதில்  தென்மாவட்டங் களைச்சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.  

   மாநில  உரிமை பாதுகாப்பு  மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநாட்டுச் செய்தியை மக்கள் மத்தி யில் கொண்டுசெல்லும் வகையில் பகுதிக்குழுக்கள்  சார்பில்  சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வரு கின்றன.