districts

img

தமிழகத்தில் பாஜகவின் வேட்பாளர்கள் டெபாசிட் அங்கீகாரம்கூட பெற முடியாது

சிவகங்கையில் எம்.சின்னத்துரை எம்எல்ஏ பேச்சு சிவகங்கை, ஏப்.9- சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆத ரித்து பிரச்சார பொதுக்கூட்டம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பேசுகையில், ‘‘தில்லி, ஜார்கண்ட் முதல்வர்  களை கைது செய்து சிறையில் அடைத் தார் பிரதமர் மோடி. உலகநாடுகளில் எங்குமே நடந்திராத அக்கிரமம், பாசிச நடவடிக்கை இந்தியாவில் நடந்துள்ளது.  ஒரே தேர்தல் முறைக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து திமுக  கூட்டணி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்  தோம். ஆனால் எடப்பாடி என்ன செய்தார்,  கருத்தே சொல்லாமல் வெளிநடப்பு செய்தனர்.  சர்வாதிகார ஹிட்லரை வீழ்த்த ரஷ்யா  தளபதி ஸ்டாலின் வந்தார். இந்திய பாசி சத்தை வீழ்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத, மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான நிதியை குறைத்து ஒதுக்கிய, வெள்ளம் நிவாரண நிதி அளிக்காத மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம். தமிழகத்தில் பாஜகவின் வேட்பாளர்கள் டெபாசிட் அங்கீகாரம்கூட பெற முடியாது’’ என்று கூறினார். கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் கருப்புச்சாமி, தென்னரசு, ஒன்றியச் செயலாளர் தென்னரசு தலைமையில், சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை, மாவட்டச் செயலாளர் (பொ) கருப்புச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஆரோக்கியசாமி, மெய்யப்பன், இராஜாங்கம், வீரையா, வெற்றி விஜயன், காளிதாஸ், திருநாவுக் கரசு திருமாறன், நரசிங்கம் முத்துராஜா, சலேத் ராஜ், அற்புதம், போதகராஜ், மலைச் சாமி, நாகராஜன், ஜேம்ஸ், சிதம்பரம், காளீஸ்வரன், பாலா சீதாராமன், சித்ரா ஜோதிநாதன், சீனிவாசன், வெள்ளைச்சாமி, கர்ணன், மாரி கதிரேசன், முத்துக்குமார், கோவிந்தன், சகோதரன், கணேஷ்குமார், பெரியகருப்பன, ஜெய் சங்கர், ஓம் பிரகாஷ், அய்யனார், அய்யாக்கண்ணு, பூ மாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.