திருத்துறைப்பூண்டி, டிச.4 - திருவாரூர் மாவட்டம் தைக்கால் கிராமம் பெரிய தோப்பை சேர்ந்த வசந்த் என்ற குழந்தை சமீபத்தில் கொரோனா பெருந்தொற்றால் தனது பெற்றோரை இழந்தது. இந்நிலை யில், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக கறவை மாடு ஒன்று பாரத மாதா சேவை நிறுவனங்கள் சார்பில் வாங்கப்பட்டு, அந்த பசு மாட்டினை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில், திருவாரூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா மற்றும் பாரதமாதா சேவை நிறுவனங்களின் இயக்குனர் எடையூர் மணிமாறன் முன்னிலையில் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் முத்தமிழ்ச் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் சங்கீதா, மணிமாறன், பாதுகாப்பு அலுவலர் சரிதா, களப் பணியாளர் சாந்தி, பாரதமாதா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.