பாபநாசம், ஜூலை 7 - பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் புதிய பொறுப்பா ளர்கள் பணி ஏற்பு விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் ஆர்.டி.பி கல்லூரியில் நடந்த பணி ஏற்பு விழாவில் தலைவர் செந்தில், செயலர் பன்னீர் செல்வம், பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்டோரை சேதுகுமார் பணியில் அமர்த்தி பேசினார். முன்னாள் தலைவர் ராஜா முகமது, வட்டாரத் தலைவர் கணேசன், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சுயதொழில் தொடங்க ஒரு பெண்ணிற்கு கிரைண்டர், சுடர் காப்பகத்திற்கு அரிசி மூட்டை, பள்ளிகளுக்கு 3 மின்விசிறி, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.