districts

லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

தஞ்சாவூர், ஜூலை 5-  

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு  விழா, தலைவர் செ.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. 2023-24 ஆம் ஆண்டிற் கான புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தியும், புதிய நிர்வாகிகளை சங்கத்தில் இணைத்தும், சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தும், மாவட்ட முதலாம் துணை நிலை  ஆளுநர் பொறியாளர் ஏ.சவரிராஜ் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், சங்கத்தின்  புதிய தலைவராக கே.சிவநாதன், செயலாளராக ஜி.ராஜா, பொருளாளராக பி.பழனி யப்பன் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில், பல் மருத்துவ படிப்பில் பயிலும் மாண விக்கு ரூ.5 ஆயிரம், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பி லான தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.