districts

திருச்சி முக்கிய செய்திகள்

கும்பகோணம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கும்பகோணம், மே 21 கும்பகோணத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய் யப்படுவதாக கும்பகோணம் மாநகராட்சிக்கு புகார் வந்தது. அதன்படி  மாநகராட்சி நகர் நல அலுவலர் ஆடலரசி தலைமையில் மாநகராட்சி அதி காரிகள் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் வடக்குவீதி, பெரியகடைதெரு உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துடன் அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்த னர். மேலும் கடை உரிமை யாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், கும்பகோணத் தில் பல்வேறு இடங்களில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை  குறைப்பதற்கு தொடர்ந்து சோதனை நடை பெற்று வருகிறது. அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அதிகளவு அபராதம் விதிப்பதுடன் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்றனர்.

பாவை பைந்தமிழ் பேரவைக் கூட்டம்

பாபநாசம், மே 21- பாவை பைந்தமிழ்ப் பேரவை மாதக் கூட்டம் நடந்தது. பாபநாசம் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆசைத் தம்பி தலைமை வகித்தார். முன்னதாக செந்தில் வரவேற்றார்.  செங்கமலம் முன்னிலை வகித்தார். அசோக் அறிமுக உரையாற்றி னார். முனைவர் மாலதி பாவேந்தரும், தமிழும் என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் கமலஹாசன், ஜெயராமன், பாஸ்கர், கலைச் செல்வன், சங்கர், மோகன், கலிய பெருமாள் உள்பட பங்கேற்றனர். குருசாமி நன்றி கூறினார்.

உலகத் திருக்குறள் மையக்கூட்டம்

 பாபநாசம், மே 21- உலகத் திருக்குறள் மைய மாதக் கூட்டம் நடந்தது. உலகத் திருக்குறள் மைய 298 ஆவது மாதக் கூட்டம் பாப நாசம் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இரகுபதி தலைமை வகித்தார். முன்னதாக கமல ஹாசன், பொன்னோ சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்ன தாக சங்கர் வரவேற்றார். புலவர்ஜானகி ராமன் வள்ளுவம்  உணர்த்தும் இல்லறம் என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றி னார். இதில் தவச் செல்வன், கலைச் செல்வன், கலிய பெரு மாள், செங்கதிர் செல்வன்உள்பட பலர் பங்கேற்றனர். குருசாமி நன்றி கூறினார்.

ஓய்வு அலுவலர் சங்கக்கூட்டம்

பாபநாசம் மே 21      பாபநாசம் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க மாதக் கூட்டம் நடந்தது. பாபநாசத்தில் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் தங்கராசு  தலைமை வகித்தார். முன்னதாக செயலர் துரை சாமி வரவேற்று, கடந்த மாத அறிக்கையை வாசித்தார். கடந்த மாத வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் துரை ராஜ் வாசித்து உறுப்பி னர்களின் ஒப்புதல் பெற்றார். இதில் மாவட்டப் பொருளா ளர் தயாநிதி, கலைச் செல்வன் உட்பட பல உறுப்பினர்கள்  பங்கேற்றனர். கூட்டத்தில் ஜுன் மாதத்தில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

செட்டிநாடு சிமெண்ட் ஆலை உணவகத்தில்  புகையிலை பொருள்கள் பறிமுதல்

அரியலூர், மே 21- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலை உணவகத்தில் 400 பாக்கெட் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(55) என்பவர் உண வகம் (கேண்டீன்) நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த உணவகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொ ருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழப்பழுவூர் காவல்  துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், உணவகத்தில் 400 பாக்கெட் கள் ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்

தூத்துக்குடி , மே 21- தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவை மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியுடன் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும்.  இதனை முகவரிச் சான்றாக வங்கி  மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சலக அடையாள அட்டையினை பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவங்க ளை ரூ.20/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களைப் பெற்று அந்த பகுதி தபால் காரர் மூலம் சரிபார்க்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.250/-  பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22/- அதிகமாக செலுத்த வேண்டும். இந்த அட்டை மூன்று வருடங்களுக்கு செல்லுபடி யாகும். ஆதார் அட்டை முகவரி மாற்றம் செய்ய இதனை ஒரு சான்றாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிகள்  சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது   ஒஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் தகவல்

மயிலாடுதுறை, மே 21-  எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது என ஒஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலை வர் தகவல் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் ஒஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவரும், காவிரி அசட்ஸ் குழு பொது மேலாளர் மாறன் நிருபர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் பகுதி யில் 8 எண்ணை கிணறுகள் மராமத்து பணி கள் செய்ய வேண்டியுள்ளது. இந்த 8 கிணறு கள் மராமத்து செய்வதில் தவறான புரித தால் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். எண்ணெய் கிணறுகள் அனுமதி துரப்பணம் செய்வ தற்காக மட்டுமே. தோண்டிபிறகு கிணறு ஒரு இன்ஸ்டாலேஷனுடன் இணைக்கப்பட்ட பிறகு அனுமதி புதுப்பிக்கப்பட வேண்ய அவசி யமில்லை. அதனால் உரிமம் முடிவுற்ற எண்ணெய் கிணறுகள் என்று எவையும் இல்லை.  தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பாதுகாகப்பட்ட வேளாண் மண்டல சட்டம்  நடைமுறைக்கு வந்தபிறகு புதிய இடங்களி லோ, பழைய எண்ணெய் கிணறுகள் வளா கங்களிலோ புதிய துரப்பண திட்டங்கள் அமைக்கப்படவில்லை. இருக்கின்ற கிணறு களின் மராமத்து பணி எந்த வகையிலும் சட்ட விரோதமானது இல்லை.  மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஒஎன்ஜிசி மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டே எல்லா நடவடிக்கை களையும் எடுத்து வருகிறது. மராமத்து என்ற பெயரில் ஓசைபடாமல் பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் கிடை யாது. மராமத்து செய்ய உள்ள 8 எண்ணெய் கிணறுகள் குத்தாலம் சேகரிப்பு நிலையத்து டன் இணைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசிய மில்லை. மராமத்து பணிகள் சட்ட விதி முறைகளுக்கு உட்பட்டுதான் மாசுகட்டுப் பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோருக்கு தெரிவித்துதான் பணிகள் நடந்து வருகிறது. அதனால் குத்தா லம் பகுதியில் உள்ள 8 எண்ணெய்க் கிணறு களும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் மராமத்து பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.  உடன் மனிதவள அலுவலர் கணேசன், குத்தாலம் மேலாளர் குணசேகரன், சிவசங்க ரன் ஆகியோர் இருந்தனர்.

சாலை விபத்து: ரியல் எஸ்டேட் உரிமையாளர் பலி

தஞ்சாவூர், மே.21 -  தஞ்சாவூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே வல்லம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆர்.விஜயகுமார் (47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மே.17 ஆம் தேதி தஞ்சாவூரில் வேலையை முடித்துவிட்டு, வல்லத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரில் தான்தோன்றியம்மன் கோயில் அருகே சென்ற இந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியது.  இதனால், பலத்த காயமடைந்த விஜயகுமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம்? சங்கம் விடுதி விவகாரத்தில்  3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

புதுக்கோட்டை, மே 21- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சி குருவண்டான்தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக கடந்த ஏப். 25ஆம்தேதி புகார் எழுந்தது. இச்சம்பவத்தில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். சிபி சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சிபி சிஐடி திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொ) சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தண்ணீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்துள்ளதாக முதலில் விடியோ பதிவு செய்து வெளியிட்ட நபர் உள்பட 3 பேரிடம் விசாரணைக்காக சிபி சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூன் 5ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இம்மூவர் உள்பட மேலும் சிலரையும் இம்மாதத்துக்குள் விசாரிக்க இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேங்கைவயல்- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய சிபிசிஐடி

புதுக்கோட்டை, மே 21- - வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபி சிஐடி போலீஸார் மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பர் 25ஆம் தேதி தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது சிபி சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குரல் மாதிரிப் பரிசோதனை, மரபணு பரிசோதனை என பல வகைகளில் சிபி சிஐடி போலீஸார் முயற்சித்தும் இதுவரை குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய ஒருமாதம் அவகாசம் கோரி சிபி சிஐடி போலீஸ் தரப்பில், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நீதிமன்றதத்தில் கால அவகாசம் கேட்டுப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 நாகர்கோவில் மாநகராட்சிக்கு  38 சக்கர நாற்காலிகளை டிஎம்பி வழங்கியது  
தூத்துக்குடி , மே 21 தூத்துக்குடியை தலைமையிட மாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி யின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (CSR) நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் ஸ்பான்சர் செய்துள்ளது. வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார், பிடி அண்டுஆர்எம் துறை ராஜா, திரு வனந்தபுரம் மண்டல மேலாளர் ராம்குமார், மார்க்கெட்டிங் அலுவலர் சிவசங்கர், நாகர்கோவில் கிளை மேலாளர், மற்றும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அதிகாரி கள் முன்னிலையில், சக்கர நாற்கா லியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா விடம் வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார் வழங்கினார்.  தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்ட இந்த டிஎம்பி வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவை யிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுத லுக்குரிய சரித்திரம் படைத்து வரு வதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநி லங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 558 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கை யாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.

 




 

;