கும்பகோணம், செப். 3- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கோவி.செழியனை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்ப ழகன் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார் . அம்மனுவில் , உயர் கல்வித்துறை நிர்வாகத்தில் உள்ள கும்பகோணம் அரசு ஆடவர்கல்லூரி மற்றும் தமிழ் நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா வியல் பட்டப்படிப்பு (Indian Culture and Tourism) படித்த மாணவர்களும் படிக்க இருக்கின்ற மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயணம் மற்றும் சுற்றுலா (Travel and Tourism) என்ற பட்டப்படிப்பும் இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா வியல் (Indian Culture and Tou rism) என்ற பட்டப்படிப்பும் இணையா னவை என்ற அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாநி லங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் மற்றும் தஞ்சாவூர் திருவை யாறு பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.