வினேஷ் போகத்திற்கு ரூ.70.45 கோடி செலவு செய்யப்பட்டது உண்மையா?
அப்படி என்ன செலவு செய்தது மோடி அரசு?
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதை விட, தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தும் வேலையிலேயே மோடி அரசு தீவிரமாக களமிறங்கி யுள்ளது. தகுதி நீக்கத்தை நியாயப் படுத்த பாஜக எம்.பி.,க்கள் பல்வேறு தவறான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வினேஷ் போகத் தின் பயிற்சிக்காக ரூ.70.45 கோடி செலவு செய்யப்பட்டது என்ற தவறான கருத்துக்களைக் கூறி பிரச்சனையை திசை திருப்ப மோடி அரசு அடுத்த கட்ட சூழ்ச்சி வேலையில் இறங்கி யுள்ளது. வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மான்டேவியா, “மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பயிற்சிக்கு ஒன்றிய அரசு ரூ.70.45 கோடி செலவு செய்துள்ளது” எனக் கூறினார். வலுக்கும் சந்தேகம் வினேஷ் போகத் கடந்த ஏப்ரல் 19 அன்று “ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் குறைவான காலமே உள்ள சூழலில் பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர் களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அரசியல் சூழ்ச்சியால் எனக்கு என்ன சதி வேண்டுமானாலும் நடக்கலாம்” என தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதி விட்டு இருந்தார். வினேஷ் போகத்தின் கூற்று இவ்வாறு உள்ள நிலையில், மோடி அரசின் செலவு விகித அறிக்கை அதற்கு எதிர் மறையானதாக உள்ளது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணியின் பயிற்சிக்கு ரூ.41.81 கோடி செலவும், வினேஷ் போகத் என்ற ஒற்றை பெண்ணிற்கு மட்டும் ரூ.70.45 கோடி அளவில் அப்படி என்ன செலவு செய்யப் பட்டது. ஏப்ரல் மாதம் தனது பயிற்சிக்கு ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில் லை என வினேஷ் போகத் கூறியுள்ள நிலையில், வெறும் 2 மாதங்களில் செய்த செலவுகள் என்ன என சந்தேகம் வலுத் துள்ளது. மோடி அரசின் செலவு தொடர்பான கூற்றில் ஒன்று மட்டும் உறு தியாக புரிந்து கொள்ள முடிகிறது. ரூ.70.45 கோடி செலவு செய்தும் வினேஷ் போகத் பதக்கம் வெல்ல வில்லை என சுட்டிக்காட்டி தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தியுள்ளது மோடி அரசு.
கம்பீருக்கு நெருக்கமான மோர்னே மார்க்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை புதனன்று மாலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. மோர்னே மார்க்கல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான முன்னாள் பாஜக எம்.பி., கவுதம் கம்பீருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். கம்பீர் ஐபிஎல் அணியான கொல்கத்தா அணிக்கு கேப்டனாக பணியாற்றிய பொழுது பந்துவீச்சாளராகவும், கொல்கத்தா அணியின் ஆலோசகராக கம்பீர் இருந்த பொழுது மார்க்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.